உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை அமாவாசை: நுாபுரகங்கை தீர்த்தத்தில் நீராடிய பக்தர்கள்

தை அமாவாசை: நுாபுரகங்கை தீர்த்தத்தில் நீராடிய பக்தர்கள்

அழகர்கோவில்: தை அமாவாசையை முன்னிட்டு நேற்று அழகர்கோவில் மலை மீது உள்ள நுாபுரகங்கை தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடினர். அதிகாலையே மலைப் பாதையை திறந்து, பஸ்கள் இயக்கப்பட்டன.அங்குள்ள ராக்காயி அம்மன், மலையில் உள்ள சோலைமலை முருகனையும் தரிசித்தனர். காலையில் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானைக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனையும், பகலில் சுவாமி புறப்பாடும் நடந்தது. மலை அடிவாரத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.திருவேடகம்: இங்கு வைகை ஆற்றில் ஏடு எதிரேறியதன் பொருட்டு புனித ஏடகநாதர் சுவாமி கோயில் உள்ளது. நேற்று ஏராளமானோர் வைகை ஆற்றில் முன்னோருக்கு சடங்குகளை செய்தனர். வெளியூர் பக்தர்களுக்காக அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என புகார் எழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !