உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுர கிறிஸ்தவ தேவாலய தேர் திருவிழா

மாமல்லபுர கிறிஸ்தவ தேவாலய தேர் திருவிழா

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், கிறிஸ்தவ தேவாலய தேர் திருவிழா நடந்தது. மாமல்லபுரத்தில், கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபை சார்பில், பழமையான தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தேர் திருவிழா, தற்போது நடந்தது. தேவாலய கொடியேற்றப்பட்டு, 10 நாட்களாக, சிறப்பு திருப்பலி மற்றும் சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து, இறுதி நாளான, நேற்று முன்தினம் இரவு, அலங்கார தேர்களில், குழந்தை ஏசுவுடன் மாதா, அந்தோணியார், சவேரியார் என, வீதியுலா சென்றனர். அவர்களை, பக்தர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !