மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச வைபை வசதி சுற்றுலாத்துறை ஏற்பாடு
ADDED :3210 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் விதமாக இலவச வைபை இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் இலவசமாக இணையதள வசதியை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, தமிழக சுற்றுலாத்துறை சார்பில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, கோயிலின் நான்கு புறமும் உள்ள காலணி பாதுகாப்பு அறையில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் வைபை சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனை, கோயில் சுற்றி 150 மீட்டருக்குள் இருப்பவர்கள் பயன்படுத்த முடியும். சுற்றுலா பயணிகள் தங்கள் அலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் ரகசிய எண்ணை (ஓ.டி.பி.,) டைப் செய்வதன் மூலம் இணையதள இணைப்பை பெறலாம். ஒருவர் இணைப்பை முப்பது நிமிடங்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.