பழநி ரோப்கார் நிறுத்தம்
ADDED :3515 days ago
பழநி: பழநி மலைக்கோயில் ரோப்கார் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை முதல் இரண்டு நாட்கள் நிறுத்தப்படுகிறது.பழநி ஞான தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் மூன்று நிமிடத்தில் சென்று வரும் வகையில் தினமும் ரோப்கார் காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை இயக்கப்படுகிறது.மாதந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (ஜன.,31) நாளை மறு நாள் (பிப்.,1) ஆகிய இரு நாட்கள் நிறுத்தப்படுகிறது.இதில் உருளைகள், கம்பி வடக்கயிறு, பெட்டி களை கழற்றி ஆயில் போடப்படவுள்ளது. பின் ஒவ்வொரு பெட்டிகளிலும் குறிப்பிட்ட அளவு எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடக்கிறது. அதில் பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதி செய்தபின் ரோப்கார் பிப்.,2 முதல் வழக்கம்போல் இயக்கப்படும், என பழநி கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.