கோயில் பூஜாரிகள் ஆலோசனை கூட்டம்
ADDED :3210 days ago
திருப்பரங்குன்றம்: தமிழக கோயில் பூஜாரிகள் நலச்சங்க மதுரை மாவட்ட பூஜாரிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் வாசு தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜோதி மணிவண்ணன், செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் சுந்தரம் வரவேற்றார். கூட்டத்தில், கோயில் பூஜாரிகளுக்கு மாத ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் உயர்த்தி வழங்குதல், வீட்டு மனை இல்லாத பூஜாரிகளுக்கு மூன்று சென்ட் இடம் வழங்குதல், பூஜாரிகள் வருமான உச்சவரம்பை முற்றிலும் நீக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட ஆலோசகர் சுகுமார் நன்றி கூறினார்.