குமரகுரு பரமேஸ்வரருக்கு 108 கிலோ திருநீறு அபிஷேகம்
ADDED :3213 days ago
நெல்லிக்குப்பம்: குமராபுரம் குமரகுரு பரமேஸ்வரருக்கு 108 கிலோ திருநீறு அபிஷேகம் நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த குமராபுரம் குமரகுரு பரமேஸ்வரர் கோவிலில் தை மாதம் மூன்றாம் பிறையை முன்னிட்டு 108 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.குமரகுர பரமேஸ்வரர் உடலில் 108 கிலோ திருநீறு மூலம் அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது.பக்தர்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கினர்.நோய்களை தீர்க்கும் ஆற்றல் உடையது திருநீறு என திருமூலநாதன் சிவாச்சாரியார் கூறினார்.