உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் தைப்பூச திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் பரவசம்

பழநியில் தைப்பூச திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் பரவசம்

பழநி: பழநி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநிகோயிலுக்கு அலகுகுத்தி, காவடி, பால்குடங்களுடன் கிரிவீதியில் பக்தர்கள் வலம் வருகின்றனர்.

பழநி தைப்பூச விழா வரும் பிப்.,3 முதல் பிப்.,12 வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு தற்போதே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். இந்த பக்தர்கள் சண்முகநதியில் நீராடி அலகு குத்தி, காவடிகள் எடுத்தும், பால்குடம் எடுத்து ஆட்ட பாட்டத்துடன் கிரிவலம் வந்து மூலவர் ஞான தண்டாயுத பாணிசுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வரும் நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் நகரில் குப்பையின்றி சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !