உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈக்காடு பிடாரி வாளியம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

ஈக்காடு பிடாரி வாளியம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர்: ஈக்காடு கிராம தெய்வமான, பிடாரி வாளியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, நாளை, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருவள்ளூர் அடுத்த, ஈக்காடு கிராமத்தில், கிராம தேவதையாக, பிடாரி வாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை, கிராமவாசிகள் சிற்ப வேலைகள் செய்து, ராஜகோபுரத்தை புதிதாக கட்டி, புனரமைப்பு செய்தனர். பணிகள் முடிவடைந்த நிலையில், மகா கும்பாபிஷேக விழா, நேற்று காலை, கணபதி பூஜை, தன பூஜை, கோ பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. இன்று காலை, 7:00 மணியளவில், இரண்டாம் கால பூஜையும், மாலை, 5:00 மணியளவில் கோபுர கலசங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.  நாளை காலை, 9:30 மணி முதல், 10:00 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்து, தீபாராதனை காட்டப்படும். இரவு, 7:00 மணிக்கு மேல், அலங்கார பல்லக்கில் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !