உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே, மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. வேம்படிதாளம், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு, கடந்த, 27 முதல், சிறப்பு யாக பூஜை நடந்தது. 28ல், தாரை, தப்பட்டை முழங்க, பசு, குதிரை, யானையுடன், 5,000 பக்தர்கள், சித்தர்கோவிலில் இருந்து, புனிதநீர் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். நேற்று காலை, 6:30 மணியளவில், கோபுர கலசம் மீது, கும்பாபிஷேகம் நடந்தது. அதில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் மீது, நவீன மின்மோட்டார் பயன்படுத்தி, தீர்த்தம் தெளிக்கப்பட்டது. மாலை, 5:00 மணியளவில், அலங்கார ஊர்தியில் அம்மன் திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !