அதியமான்கோட்டை கால பைரவர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :3195 days ago
தர்மபுரி: தர்மபுரி அடுத்த அதியமான் கோட்டை காலபைரவர் கோவிலில் நேற்ற, 108 சங்காபிஷேகம் நடந்தது. தர்மபுரி அடுத்த அதிய மான்கோட்டை தட்சன காசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவில் கும்பாபிஷேகம், கடந்த, 2014 பிப்., 1ல் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து நேற்றுடன், மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், நேற்று காலை ராகு காலமான பகல், 12:00 மணிக்கு மேல், காலபைரவருக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது.