உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி ராஜகோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம்

காளஹஸ்தி ராஜகோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம்

திருப்பதி, காளஹஸ்தியில் புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுரத்திற்கு, நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.ஆந்திராவில் உள்ள, காளஹஸ்தீஸ்வரன் கோவிலில், 146 அடி உயரத்தில், புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுரத்திற்கு, பிப்., 1ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ராஜகோபுரத்தின் மேல் பொருத்த வேண்டிய, ஒன்பது தங்க கலசங்களில், இரண்டு கலசங்கள் தாமதமாக வந்ததால், கும்பாபிஷேகம் ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம், தங்க கலசங்களுக்கு, தனித்தனியே, பூஜை நடந்தது. பின் கலசங்கள், கிரேன் மூலம் ராஜகோபுரத்தின் மேல் பொருத்தப்பட்டன. நேற்று காலை, தங்க கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதன்பின், கலசத்தின் மேல் ஊற்றப்பட்ட புனித நீர், பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவில் முன் திரண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !