உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் சிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

கைலாசநாதர் சிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில், கைலாசநாதர் சிவன் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களான, கணபதி, முருகன், நவக்கிரஹங்கள் மற்றும் இதர சுவாமிகளுக்கு நேற்று காலை, 9:50 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக, கடந்த, 31 அன்று காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வந்து, கணபதி, நவக்கிரஹ லட்சுமி ஹோமம்கள் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு, முதல் கால யாகபூஜை நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை செய்து, அனைத்து சுவாமிகளுக்கும் கோபுர கலசாபிஷேகம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. திம்மாச்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !