வெண்ணெய்மலை முருகன் கோவிலில் கொடியேற்றம்
ADDED :3167 days ago
கரூர்: வெண்ணெய்மலை, பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கொடியேற்ற விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் அருகே, வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தை திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 8 அன்று சுவாமிக்கு திருக்கல்யாணம், வரும், 10 மாலை 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. தொடர்ந்து கோவிலில் இருந்து, உற்சவர் பத்து நாட்கள் தினமும் சிறப்பு அலங்காரத்தில், சுவாமி வீதி உலா நடக்கவுள்ளது. தை திருநாளை முன்னிட்டு, நேற்று முதல் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். ஏற்பாடுகளை செயல்அலுவலர் ராஜாராம் மற்றும் பரம்பரை அறங்காவலர் சொக்கலிங்கம் ஆகியோர் செய்து வருகின்றனர்.