சாந்தமாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா
ADDED :3169 days ago
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் ஒன்றியம், அகரம் அடுத்த பட்டகரஅள்ளி கிராமத்தில் உள்ள வரசித்தி விநாயகர், சாந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை கணபதி ஹோமம் நடந்தது. பிறகு, தீர்த்தக்குடம் அழைத்தல் நிகழ்ச்சி
மற்றும் முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.