உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கி.கிரி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா துவக்கம்

கி.கிரி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா துவக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் பிப்.,3 தொடங்கியது. கிருஷ்ணகிரி, காட்டிநாயனப்பள்ளியில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்தாண்டு வரும், 9 அன்று தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பிப்.,3 கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கிருஷ்ணகிரி பழைய பேட்டை பர்வதராஜகுல சத்திரியர்கள் செய்தனர். இன்று மயில் வாகன உற்சவம், நாளை ரிஷப வாகன உற்சவம், 6ல் சேஷவாகன உற்சவம் நடைபெறுகிறது. 7 அன்று மாலை, 6:00 மணிக்கு திருமாங்கல்யதாரண நிகழ்ச்சி நடக்கிறது. 8ல் யானை வாகன உற்சவம், 9 அன்று தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. காலை 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி எழுந்தருள உள்ளார். இரவு மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், சுவாமி நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. கோவில் அரங்கில், தினமும் இன்னிசை கச்சேரி
நடக்கிறது. விழாவையொட்டி, வரும், 9 முதல் 14 வரை மாட்டு சந்தை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !