உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி குமர சுப்ரமண்ய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பரமக்குடி குமர சுப்ரமண்ய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பரமக்குடி: பரமக்குடி ஸ்ரீ குமர சுப்ரமண்யசுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

பரமக்குடி சுதரராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கிவரும் இக் கோயிலில் கடந்த பிப்., 1ம் தேதி கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சுந்தரராஜப் பெருமாள் கோயில் தீர்த்தவாரி மண்டபத்தில் இருந்து புனித தீர்த்த கலசங்கள் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டன.தொடர்ந்து யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகியது. காயத்ரி ஹோமம், கோ பூஜை, சுமங்கலி பூஜை, லஷ்மி பூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் நான்குகால யாக பூஜைகள் நிறைவடைந்தன. இதையடுத்து பிப்.,3 காலை கடம் புறப்பாடு நடந்தது. கோயிலை வலம்வந்த பின்னர் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள்
மூலஸ்தான கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றினர். விநாயகர், சண்முகநாதர் மூலஸ்தான கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சிகள்
நடந்தது. ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !