உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலவநத்தம் சிவசந்தநாத சுவாமி பரிபூரணத்தம்மன் கோயிலில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா கோலாகலம்

பாலவநத்தம் சிவசந்தநாத சுவாமி பரிபூரணத்தம்மன் கோயிலில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா கோலாகலம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் பாலையம்பட்டி, அருள்மிகு சீலக்காரியம்மன் திருக்கோயிலில் 3.2.2017 வெள்ளிக்கிழமை அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. அத்துடன் பாலவநத்தம் அருள்மிகு சிவசந்தநாத சுவாமி பரிபூரணத்தம்மாள் இருளப்பசாமி திருக்கோயிலில் 6.2.2017 திங்கட்கிழமையும் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்:

4.2.2017 (சனிக்கிழமை)

காலை: 8.50 மணிமுதல் 11.00 மணிவரை மங்கள இசை, விநாயகர் பூஜை, புண்யாஹவாசனம், மஹாகணபதி, நவகிரஹ, லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை.
மாலை: 5.30 மணிமுதல் 9.00 மணிவரை மங்கள இசை, வாஸ்து சாந்தி, ப்ரவேசபலி, ம்ருத்சங்கிரஹனம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதற்காலயாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை.
5.2.2017 (ஞாயிறு)
காலை: 9.00 மணிமுதல் 12.00 மணிவரை மங்கள இசை, விசேஷசந்தி, இரண்டாம் காலயாகபூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை.
மாலை: 6.00 மணிமுதல் 9.00 மணிவரை மங்கள இசை, விசேஷசந்தி, மூன்றாம் காலயாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை.
6.2.2017 (திங்கள்)
காலை: 7.00 மணிக்குமங்கள இசை, நான்காம் காலயாக பூஜை, ஸ்பர்சாகுதி, மகாபூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்படுதல்.
காலை: 9.07 மணிமுதல் 10.24 மணிவரை விமானம் மூலஸ்தானம் கும்பாபிஷேகம்

யாகசாலை வேளையில் வேத பாராயணமும், திருமுறை பாராயணமும் நடைபெறும். பிற்பகல்: 12.30 மணிக்குமேல் அன்னதானம் நடைபெறும்.

சர்வ சாதகம்: முத்துராமன் பட்டர், விஸ்வேஸ்வரர் ஆலயம்,
அண்ணாநகர், மதுரை.

தொடர்புக்கு:

இரா.பாலமுருகன்,தலைவர்,
ஏ.சி. குணசேகரன், செயலாளர்.
ஏ.சி.ஏ.சங்கர்ராஜ், பொருளாளர்,
மொபைல்: 9994169125
மண்டலபூஜை நிறைவு: 17.2.2017 மாசி 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !