உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேத மந்திரம் முழங்க சமயபுரம் மாரியம்மன் கும்பாபிஷேகம் கோலாகலம்!

வேத மந்திரம் முழங்க சமயபுரம் மாரியம்மன் கும்பாபிஷேகம் கோலாகலம்!

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, மூலவர் தங்க விமான கலசத்தில் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷகம் கோலாகலமாக நடைபெற்றது. வேதமந்திரங்கள் முழங்க ராஜகோபுரம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களில், புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினர். கோவிலின் அருகே உள்ள வீடுகள், தண்ணீர் டேங்குகள் உள்ளிட்டவைகளில் நின்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !