உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி வீதியுலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி வீதியுலா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி மாட வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, இரவு, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சுவாமிகளுக்கு, கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர், தனித்தனி வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு, மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.மாட வீதியில் சுவாமி உலா வந்த போது, நித்யானந்தா, பெண் சீடர்களுடன் வந்து தரிசனம் செய்தார். அருணாசலேஸ்வரர் பக்தர்கள், அவரைக் கண்டு ஒதுங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !