உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை வராகி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா

உத்தரகோசமங்கை வராகி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா

கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் வராகி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா வரும் 10ம் தேதி நடக்கிறது.அன்று மாலை 3:00 மணிக்கு பெண்கள் மஞ்சள் நீரை கலசங்களில் சுமந்தமாறு கோயிலை சுற்றி சக்தி ஸ்தோத்திரம் உச்சரித்தவாறு வீதியுலா வருகின்றனர். இரவு 7:00 மணிக்கு வராகி அம்மனின் திருமேனியில் மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது.தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனைதரிசிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !