உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாணார்பட்டி குலம் காக்கும் காளியம்மன் கோவிலில் மண்டல பூஜை

சாணார்பட்டி குலம் காக்கும் காளியம்மன் கோவிலில் மண்டல பூஜை

சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி குலம் காக்கும் காளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது. முன்னதாக கோவிலில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, நவகிரக ஹோமம், பஞ்சகவ்ய யாகம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால், பழம், நெய், தேன்,பஞ்சகவ்யம் உள்ளிட்ட 21 வகை அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !