சின்னாளபட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஏகாதசி விழா
ADDED :3501 days ago
சின்னாளபட்டி: அம்பாத்துரை ரோடு ஆஞ்சநேயர் கோயிலில், ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. துளசி, வெற்றிலை மாலை அலங்காரத்துடன், சிறப்பு அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனையுடன், ஏகாதசி சிறப்பு பூஜைகள் நடந்தது. சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த ஏகாதசி விழாவில், விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. கன்னிவாடி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் ஏகாதசி பூஜை நடந்தது.