புனித செபஸ்தியார் ஆலய திருவிழா
ADDED :3370 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மகாலிங்கபுரம் புனித பவுல் தேவாலயத்தில், புனித செபஸ்தியார் திருவிழா கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி மகாலிங்கபுரம் புனித பவுல் தேவாலயத்தில், கொடியேற்றத்துடன் புனித செபஸ்தியார் திருவிழா துவங்கியது. தினமும், இறை இரக்கத்தின் ஜெபமாலை, நவநாள், திருப்பலி நிகழ்வுகள் நடந்தன. அதையடுத்து, வீடுகளுக்கு அம்பு பவனியும், அம்பு பவனி ஆலயம் திரும்புதலும் நடந்தது. கடந்த, 5ம் தேதி, பாண்டு இசையுடன் ஆசீர்வாதம் நிகழ்ச்சியும், தேர் பவனியும், நற்கருணை ஆசீர்வாதமும், வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.