பக்தர்களுக்கு குடிநீர் வசதி கேட்டு மனு
ADDED :3295 days ago
திருப்பூர் : பழநி பாதயாத்திரை செல்ம் பக்தர்களுக்கு, குடிநீர் வழங்கவும் , பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, நுகர்வோர் உரிமைகள் அசோசியேசன் மாவட்ட தலைவர் சாஸ்தா சுப்ரமணியம் அளித்த மனு: பழநி தைப்பூச விழாவுக்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கக் கான பக்தர்கள் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு, பிளாஸ்டிக் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட குடிநீர் வழங்குவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, உவு, குடிநீரை, பிளாஸ்டிக் பைகளில் வழங்காமல், பாதுகாக்கப்பட்ட முறையில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.