சிவகாசியில் தெப்ப உற்சவம்
ADDED :3295 days ago
சிவகாசி: சிவகாசியில் பிரசித்தி பெற்ற கோயிலில் ஒன்று மாரியம்மன் கோயில். இங்கு பங்குனி விழாவில் திரளான பக்தர்கள் தீச்சட்டி , மாவிளக்கு, பொங்கல் வைத்து அம்மனை வழிப்படுவர். கோயிலுக்கு சொந்தமான தெப்பகுளம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதையொட்டி வருஷாபிஷேகம், மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தில் ஸ்ரீ திரிசூல ஸ்தாபிதம், நீராழி மண்டபத்துடன், தெப்பகுளமும் திறக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு தெப்ப உற்சவத்துடன், அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயில் தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர்.