வால்பாறை தைப்பூசத் திருவிழா திருக்கல்யாணம் கோலாகலம்
வால்பாறை: வால்பாறையில் தைப்பூசத்திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாணத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 12ம் ஆண்டு தைப்பூசத்திருவிழா கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று மாலை, 3:00 மணிக்கு எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலிலிருந்து திருமணசீர்வரிசை கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து மாலை, 4:30 மணிக்கு சுவாமிக்கு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன. மாலை, 6:00 மணிக்கு முருகன் வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் இன்று காலை, 10:00 மணிக்கு, வால்பாறை காமாட்சிஅம்மன் கோவிலிலிருந்து தீர்த்தம், பால்குடம், பறவைக்காவடியுடன் ஊர்வலமாகச்சென்று, சுவாமிக்கு அபிேஷக பூஜை செய்யப்படுகிறது. பின் காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தைப்பூசத்திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.