உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்கநாத பெருமாள் கோவிலில் தைமாத வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை

ரங்கநாத பெருமாள் கோவிலில் தைமாத வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை

பொள்ளாச்சி: ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது. பொள்ளாச்சி அருகே ஆனைமலை கடைவீதியில், 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாள் கோவில் உள்ளது. இத்திருக்கோவிலில், ஆண்டுமுழுவதும் பல்வேறு சிறப்பு பூஜையும், விழாக்களும், வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜையும் நடக்கின்றன. நடப்பு தை மாத வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை நேற்று முன்தினம் நடந்தது. மாலை, 6:30 - இரவு, 8:30 மணிவரை நடந்த பூஜையில் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் மற்றும் மலர்கள் கொண்டு சிறப்பு பூஜையும், அபிேஷகமும் நடந்தது. பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராமகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் ராம்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !