உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டைமாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.23ல் துவக்கம்

கோட்டைமாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.23ல் துவக்கம்

திண்டுக்கல், திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயில் மாசித் திருவிழா வரும் பிப்., 23ல் துவங்குகிறது. திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயிலின் மாசித்திருவிழா பிரசித்தி பெற்றது. முத்திரை பதிக்கும் இந்த திருவிழா வரும் பிப்.23ல் துவங்குகிறது. அன்று பூ அலங்காரம், பிப்.24ல் பூச்சொரிதல், பிப்.26ல் சாட்டுதல், பிப்.28ல் கொடியேற்றம் நடக்க உள்ளது. மார்ச் 3ல் நகர் வீதியுலா, 10ல் பூக்குழி இறங்குதல், அம்மன் திருத்தேர் உலா, 11ல் தசாவதாரம், 12ல் மஞ்சள்நீராட்டு, கொடியிறக்கம், 13ல் ஊஞ்சல் உற்சவமும், 14ல் தெப்ப உற்சவ நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. மண்டகப்படிதாரர்கள் அம்மன் வீதி உலாவை, இரவு 7:00 மணிக்கு ஆரம்பித்து, இரவு 12:00 மணிக்குள் முடிக்க வேண்டும். தினமும் இரவு 9:00 மணிக்கு கோயில் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடை பெறும் என, கோயில் பரம்பரை அறங்காவலர்கள் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !