உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதூர் கோவிலுக்கு எட்டு ஜீயர்கள் வருகை

ஸ்ரீபெரும்புதூர் கோவிலுக்கு எட்டு ஜீயர்கள் வருகை

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், ஸ்ரீராமானுஜர் அவதரித்த, ஆயிரமாவது ஆண்டு திருநட்சத்திர விழாவை முன்னிட்டு, எட்டு ஜீயர் சுவாமிகள், நேற்று ஸ்ரீபெரும்புதுார் வந்து அனுக்ரஹ உரையாற்றினர். ஸ்ரீபெரும்புதுாரில், ஸ்ரீராமானுஜர் அவதரித்த, ஆயிரமாவது ஆண்டு திருநட்சத்திர விழா, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், ஏப்., 22ம் தேதி துவங்கி, மே 1ம் தேதி வரை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு நேற்று, எட்டு ஜீயர் சுவாமிகள் வந்தனர். ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீமத் பரமஹம்ஸ அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள், ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீமத் பரமஹம்ஸ யதிராஜ ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி ஸ்ரீமத் பரமஹம்ஸ பெரியகேள்வியப்பன் சடகோப ராமானுஜ பெரிய ஜீயர் சுவாமிகள்.

திருமலை திருப்பதி ஸ்ரீமத் பரமஹம்ஸ சிறியகேள்வியப்பன் கோவிந்த ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகள், ஸ்ரீமத் பரமஹம்ஸ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள், திருநாராயணபுரம் ஸ்ரீ யதுகிரி யதிராஜ நாராயண ஜீயர் சுவாமிகள். ஸ்ரீ காஞ்சிபுரம் வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர் சுவாமிகள், திருக்கோவிலுார் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் ஆகிய, எட்டு பேர், ஜீயர் சுவாமிகளின் மங்களாயாசனம், இதை தொடர்ந்து அனுக்ரஹவுரையும் நேற்று ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !