உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூச விழா 108 பால் குட ஊர்வலம்

தைப்பூச விழா 108 பால் குட ஊர்வலம்

திண்டிவனம் : திண்டிவனத்திலுள்ள ராஜாங்குலம் சுப்ரமணிய சுவாமிக்கு, தைப்பூச விழாவையொட்டி, ௧௦௮ பால் குட ஊர்வலம் நடந்தது. சுப்ரமணிய சுவாமி கோவிலின் , ௭௯ம் ஆண்டு தைப்பூச பால்காவடி உற்சவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, முருகனடியார்கள் சார்பில் ௧௦௮ சங்காபிஷேகமும், கலசாபிஷேகமும், துாய ஆராதனைகளும் நடந்தது. இதன் தொடர்ச்சியாக விநாயக பெருமானுக்கும், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கும் பக்தர்கள் பங்கேற்ற ௧௦௮ பால்குட ஊர்வலம் நடந்தது. விழாவில், ராம் டெக்ஸ் தியாகராஜன் , முன்னாள் கவுன்சிலர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஜீவரத்தினம், அர்ச்சகர் ராதா, ராஜாமணி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !