சமயபுரம் அம்மனுக்கு சீர் வழங்கும் விழா
ADDED :3277 days ago
ஏத்தாப்பூர் : ஏத்தாப்பூர் சமயபுரம் மாரியம்மனுக்கு, சீர் வழங்கும் விழா நடந்தது. சேலம், ஏத்தாப்பூர், லட்சுமி கோபால சுவாமி கோவிலில் இருந்து, வசிஷ்ட நதிக்கரையில் உள்ள சமயபுரம் மாரியம்மனுக்கு, ஆறாம் ஆண்டாக, நேற்று, மேளதாளம் முழங்க, சீர் வரிசை பொருட்களை, ஏராளமான பக்தர்கள் கொண்டு சென்றனர். மாலை, 6:00 மணியளவில், மூலவர் மாரியம்மனுக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. இதில், ஏத்தாப்பூர் சுற்றுவட்டார கிராம மக்கள், ஏராளமானோர் பங்கேற்றனர்.