உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தசாமி கோவில் திருவிழா சிறப்பு நீதிமன்றம் துவக்கம்

கந்தசாமி கோவில் திருவிழா சிறப்பு நீதிமன்றம் துவக்கம்

காளிப்பட்டி : கந்தசாமி கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு நீதிமன்றம் துவங்கியது. சேலம், காளிப்பட்டி, கந்தசாமி கோவிலில் நடக்கும் தைப்பூச திருவிழாவையொட்டி, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஆண்டுதோறும், சிறப்பு நீதிமன்றம் நடக்கும். நேற்று, திருச்செங்கோடு விரைவு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார், வழக்குகளை விசாரித்தார். அதில், குடிபோதையில் வாகனம் ஓட்டியது, பிக்பாக்கெட், அனுமதியின்றி மதுபானம் விற்றது உள்பட, ஏழு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இறுதி நாளான இன்று, சிறப்பு நீதிமன்றம் செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !