உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபாவுக்கு தங்க கிரீடம்: இத்தாலி பெண் காணிக்கை

சாய்பாபாவுக்கு தங்க கிரீடம்: இத்தாலி பெண் காணிக்கை

ஷீரடி: ஷீரடி சாய்பாபாவுக்கு, 28 லட்ச ரூபாய் மதிப்பில், தங்க கிரீடம் ஒன்றை, இத்தாலியைச் சேர்ந்த பெண் பக்தை, காணிக்கையாக அளித்துள்ளார். மஹாராஷ்டிராவில், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஷீரடியில் உள்ள, சாய்பாபா கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும், சாய்பாபாவின் பக்தர்களாக உள்ளனர். ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த, சீலிலி டோலரஸ், 72, ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தை. தன் பெயரையும், சாய் துர்கா என, மாற்றி உள்ளார்.ஒன்பது ஆண்டுகளாக, ஷீரடிக்கு வந்து சாய்பாபாவை வழிபட்டு செல்வதை, சாய் துர்கா வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், சாய்பாபாவுக்கு, 28 லட்ச ரூபாய் மதிப்பில், தங்க கிரீடம் ஒன்றை, சாய் துர்கா காணிக்கையாக வழங்கியுள்ளார். 855 கிராம் எடையுள்ள அந்த கிரீடத்தில், ரத்தின கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன், அவர், 25 லட்ச ரூபாய் மதிப்பில், இரண்டு தங்க ருத்ராட்சங்களை சாய்பாபாவுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார். இத்தாலியில், சாய்பாபாவுக்கு பிரம்மாண்ட கோவில் கட்ட, சாய் துர்கா முடிவு செய்துள்ளார்; அதற்கான கட்டுமான வரைபடத்தை, சாய்பாபாவின் பாதத்தில் வைத்து, சாய் துர்கா, நேற்று வழிபட்டார் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !