உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை சுட்ட பக்தர்கள்

கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை சுட்ட பக்தர்கள்

வேலுார்: தைப்பூச திருவிழாவை ஒட்டி, பாலமுருகன் கோவிலில், கொதிக்கும் எண்ணெயில், வெறும் கைகளால் வடை சுட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், தொரப்பாடி கிராமம், பாலமுருகன் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. காலையில், பூங்கரகம் ஜோடித்து, பம்பை மேளத்துடன் ஊர்வலம் நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள், அலகு குத்தியும், செக்கு இழுத்தும், தீ மிதித்தும், மார்பில் அம்மி வைத்தும், மஞ்சள் இடித்தும், நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில், கொதிக்கும் எண்ணெயில் வடை சுட்டு, அதை வெறும் கைகளால் எடுத்து, சுவாமிக்கு படைத்து வழிபட்டனர். இதை பார்ப்பதற்காக, சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் திரண்டனர். குழந்தை பேறு, திருமணம் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளோடு வந்த பக்தர்களுக்கு, வடை பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில், சுவாமி திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !