உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிப்.,12 முதல் பழநியில் தங்கரதப் புறப்பாடு

பிப்.,12 முதல் பழநியில் தங்கரதப் புறப்பாடு

பழநி: தைப்பூசவிழாவை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்ட தங்கரதப் புறப்பாடு (பிப்.,12) முதல் நடக்க உள்ளது. பழநி மலைக்கோயிலில் நாள்தோறும் இரவு 7:௦௦ மணிக்குமேல் தங்கரதத்தில் சின்னக்குமாரசுவாமி புறப்பாடு நடக்கும். பக்தர்கள்  இரண்டாயிரம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி, தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்நிகழ்ச்சி தைப்பூச விழாவை முன்னிட்டு பிப்.,7 முதல் 11 வரை நிறுத்தப்பட்டது. நாளை முதல் மீண்டும் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. பக்தர்கள் ‘ஆன் லைனில்’ முன் பதிவு செய்யும் வசதியும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !