உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை தெப்ப உற்சவத்துடன் பழநியில் தைப்பூசவிழா நிறைவு

நாளை தெப்ப உற்சவத்துடன் பழநியில் தைப்பூசவிழா நிறைவு

பழநி:பழநி தைப்பூச விழாவில் நாளை தேரடி தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நடக்கிறது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசவிழா பிப், 3ல் கொடியேற்றத்துடன் துவங்கி 12வரை நடக்கிறது. விழாவில் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராக காலையில் சப்பரத்திலும், இரவு 7.30 மணிக்கு காமதேனு, வெள்ளி, ஆட்டுகிடா, யானை, பெரியமயில் உள்ளிட்ட வாகனங்களில் திருவுலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தைப்பூச தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. நேற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து ஆட்டம், பாட்டத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 8:௦௦ மணிக்கு மேல் தங்கக்குதிரை வாகனத்தில் முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார்.

நாளை தெப்போற்சவம்:  விழாவின் 9-ம்நாளான இன்று காலை 9:௦௦ மணிக்கு முத்துகுமாரசுவாமி புதுச்சேரி சப்பரத்தில் திருவுலா வந்து, பெரியநாயகியம்மன் கோயில் துறையூர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இரவு 9:௦௦ மணிக்கு பெரிய தங்கமயில் வாகனத்தில் சுவாமி ரதவீதியில் திருவுலா வருதல் நடக்கிறது. விழாவின் பத்தாம் நாள் பிப்.12 (நாளை) காலை 9:௦௦ மணிக்கு சப்பரத்தில் எழுந்தருளல், இரவு 7:௦௦ மணிக்குமேல் தேரடி தெப்பக்குளத்தில் தெப்போற்ஸவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து இரவு 11:௦௦ மணிக்குமேல், பெரியநாயகியம்மன்கோயிலில் கொடி இறக்குதலுடன் தைப்பூசம் விழா நிறைவுபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !