உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திர கிரகணம்: திருச்செந்தூர் கோயில் நடை திறப்பில் மாற்றம்

சந்திர கிரகணம்: திருச்செந்தூர் கோயில் நடை திறப்பில் மாற்றம்

துாத்துக்குடி, இன்று(பிப்., 11) அதிகாலையில் சந்திர கிரகணம் நடக்க உள்ளதால், திருச்செந்துார் முருகன் கோயில் காலை 5 மணிக்கு பதிலாக, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது. திருச்செந்துார் முருகன் கோயிலில் வழக்கமாக காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இன்று அதிகாலை 5.20 முதல் 6.58 வரை சந்திர கிரகணம் நடக்கவுள்ளது. இந் நிலையில் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. அதன் பின்பு பட்டு மூலம் சுவாமி சுற்றப்பட்டு நடை சாத்தப்படும். பின் காலை 8 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிேஷகம். தீபாரதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிக்கால அபிேஷகம் தீபாரதனை நடக்கிறது. மற்ற கால வேளை பூஜைகள் தொடர்ந்து நடக்கவுள்ளதாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !