உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகணபதி கோவிலில் நிலாச்சோறு வழிபாடு

ராஜகணபதி கோவிலில் நிலாச்சோறு வழிபாடு

ஈரோடு: ஈரோடு அருகே, இடையன்காட்டுவலசில் உள்ள ராஜகணபதி கோவிலில், நிலாச்சோறு வழிபாடு நடந்தது. இதையொட்டி இரவு, 7:00 மணியளவில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின், மழை பெய்யவும், நாட்டில் அமைதி நிலவவும் வேண்டி, கும்மியடித்தனர். பின், ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு, 9:00 மணிக்கு மேல் நிலாச்சோறு வழிபாட்டுடன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !