உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) தொட்டது துலங்கும் தொழில் லாபம் பெருகும்!

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) தொட்டது துலங்கும் தொழில் லாபம் பெருகும்!

தன்னைப் போல பிறரை நேசிக்கும் தனுசு ராசி நேயர்களே!

கேது, சுக்கிரனால் நன்மை அதிகரிக்கும். மார்ச் 5க்கு பிறகு புதனும் சாதகமான இடத்திற்கு வருகிறார். சூரியன் மாதம் முழுவதும்  நற்பலனை வாரி வழங்குவார். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் பெருகும். தற்போது சாதகமான இடத்தில் இருக்கும் குரு மார்ச் 10ல்  வக்கிரம் அடைந்து சாதகமற்ற இடமான கன்னி ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் மனக்குழப்பம் உண்டாக வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுக்கிரனால் தொட்டதெல்லாம் பொன்னாகும் நிலை உண்டாகும். தெய்வ வழிபாடு சிறப்பாக நடந்தேறும். சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். நண்பர்களிடம் இணக்கம் அதிகரிக்கும். மார்ச் 5க்கு பிறகு  குடும்பத் தேவை அனைத்தும் தாராள செலவில் நிறைவேறும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். பிப்.16,17,18ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். பிப்.,26,27ல்  உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். பிப்.21,22,23 ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். இளைய சகோதரர்களின் வகையில் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றி அவர்களின் ஆசியை பெறுவீர்கள். நண்பர்கள் ஆதரவுடன் இருப்பர். உடல் நலம் சிறப்படையும். கண், தோல் தொடர்பான பிரச்னை மறைந்து குணம் அடைவீர்கள். பிப்.26க்கு பிறகு பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மார்ச் 4,5ல் எதிர்பாராத வகையில் பணவரவு  இருக்கும். மார்ச் 5க்கு பிறகு வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.  தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமைந்திருக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்று நடப்பீர்கள்.

பணியாளர்களுக்கு மார்ச் 5க்கு பிறகு கோரிக்கை நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிப்.14,15, மார்ச் 13ல் எதிர்பாராத நன்மை நடக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு. அரசு ஊழியர்கள் வேலையில் சற்று கவனமாக இருக்கவும்.  அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். எதிர்பார்த்த பணிமாற்றம், இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம்  கிடைக்கப் பெறுவர். புகழ், பாராட்டுக்கு குறைவிருக்காது. சக பெண் கலைஞர்களின் உதவி கிடைக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலன் கிடைக்கப் பெறுவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.  பிப்.26க்கு பிறகு பணவிரயம் உண்டாகாது. அரசியல் ரீதியான பயணம் வெற்றி பெறும்.

மாணவர்கள்  குருவால் சிறப்பான பலனைக் காண்பர். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். மார்ச் 5க்குப் பிறகு சிறப்பான பலனைக் காணலாம். போட்டிகளில்  பங்கேற்று வெற்றி காண்பீர்கள். பெற்றோரின் அறிவுரையை கேட்டு நடப்பது நன்மையளிக்கும். பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது நல்லது.

விவசாயிகள் எதிர்பார்த்த மகசூலை பெறுவர். ஆனால், அதிகம் பாடுபட
வேண்டியதிருக்கும். கால்நடை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். மாற்றுப்பயிர் சாகுபடி மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு.

பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பை பெற்று மகிழ்வர். அண்டை வீட்டாரும் ஆதரவுடன் செயல்படுவர். பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்னை மறையும். பிப்.26,27ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்குவர். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கும். மார்ச் 6,7,8ல் சகோதரிகளால் நன்மை ஏற்படும். மார்ச் 5 க்கு பிறகு பொன், பொருள் சேரும். உங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.

நல்ல நாள்: பிப்.14,15,16,17,18,21,22, 23,26,27, மார்ச்  4,5,6,7,8,13

கவன நாள்: மார்ச் 9,10 சந்திராஷ்டமம். இந்நாட்களில் பண விஷயத்தில் கவனம் தேவை. வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் ஈடுபடவும்.

அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வணங்குங்கள். வெள்ளிக்கிழமை மாரியம்மன் கோவிலுக்குச் செல்லுங்கள்.செவ்வாயன்று  முருகனுக்கு விளக்கேற்றுவது நன்மைஅளிக்கும்.ஆதரவற்றோருக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !