உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் மாசி மாத பூஜைகள் தொடக்கம்

சபரிமலையில் மாசி மாத பூஜைகள் தொடக்கம்

சபரிமலை: சபரிமலையில் மாசி மாத பூஜைகள் தொடங்கியது. பிப். 17- வரை இது தொடர்ந்து நடக்கிறது. சபரிமலையில் தமிழ் மாதம் முதல் ஐந்து நாட்கள் நடை திறந்து பூஜைகள் நடக்கும். மாசி மாத பூஜைகளுக்காக பிப்.12 மாலை 5:00 மணிக்கு திறந்தது. அன்று வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடக்கவில்லை. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி, நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்து, கணபதிஹோமம் நடத்தினார். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடந்தது. பிப். 17-ம் தேதி வரை எல்லா நாட்களிலும் இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடக்கிறது. மதியம் சகஸ்ர கலசபூஜை மற்றும் நெய்யபிஷேகத்தின் போது அஷ்டாபிஷேகமும் நடக்கிறது.பிப்.17 காலையில் புதிய கொடிமரம் அமைப்பதற்காக தற்போதைய கொடி மரம் அகற்றுவதற்கான பூஜைகள் நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.மாசி மாதம் முதல் தேதியான நேற்று அதிகாலையில் நடை திறந்த போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மண்டல சீசன் போன்று கூட்டம் அதிகமாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !