உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்மங்குடி கோவிலில் ஸம்வத்ஸராபிஷேக விழா

செம்மங்குடி கோவிலில் ஸம்வத்ஸராபிஷேக விழா

திருவாரூர்: திருவாரூர் அருகே, செம்மங்குடி அகஸ்தீஸ்வரர் உடனுறை ஆனந்தவல்லி சுவாமி கோவிலில், 19ம் ஆண்டு, ஸம்வத்ஸராபிஷேக மகோற்சவம் துவங்கியது. திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா செம்மங்குடியில், அகஸ்தீஸ்வரர் உடனுறை ஆனந்தவல்லி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆனந்தவல்லி ஸ்ரீமகாமேரு, 19ம் ஆண்டு, ஸம்வத்ஸராபிஷேக மகோற்சவம், நேற்று மாலை விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இன்று காலை, 7:30 மணிக்கு யாகசாலை இரண்டாம் கால பூஜை, 9:00 மணிக்கு, ஆனந்தவல்லி மகாமேருக்கு மகாபிஷேகம், 9:30 மணிக்கு கடம் புறப்பாடு, 10:00 மணிக்கு கலச அபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு கஜ பூஜை, அஸ்வ பூஜை, கோ பூஜை, லட்சார்ச்சனை, இரவு, 7:00 மணிக்கு கிளி வாகனத்தில் உற்சவர் வீதி உலா, ஸ்ரீவித்யா நவாவரண பூஜை நடைபெறுகிறது. நாளை, 16ம் தேதி, திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, ஸ்ரீ ஆனந்தவல்லி கைங்கர்ய சபாவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !