உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி பஞ்சமி: வராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

மாசி பஞ்சமி: வராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

மதுரை: இன்று (15ம் தேதி) மாசி 3ம் நாள் பஞ்சமி திதியை முன்னிட்டு, வராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

பஞ்சமி திதி நாட்கள் வாராஹிதேவிக்கு மிக உகந்தவை. இந்த நாட்களில், நிவேதனமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் பதார்த்தங்களை நிவேதனம் செய்து, வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம்.மேலும் அனுதினமும் பஞ்சமி, தண்டநாதா, சங்கேதா, சமயேச்வரி, சமயசங்கேதா, வாராஹி, போத்ரிணி, சிவா, வார்த்தாளி, மகாசேனா, ஆக்ஞா சக்ரேச்வரி, அரிக்னீ ஆகிய 12 திருநாமங்களுடன் போற்றி கூறி, தியானித்து வழிபட்டால், சகல வரங்களையும் அருள்வாள்.

வழிபாட்டு மந்திரங்கள் வராஹி மாலையில் ஒரு பாடல்...

இருகுழை கோமளம் தாள்புட்ப ராகம் இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
 திருநகை முத்துக்கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே!

பஞ்சமி தினங்களில் தூப-தீப ஆராதனையுடன் இந்தப் பாடலையும் பாடி மனமுருகி வாராஹிதேவியை வழிபட, அனவரதமும் நமக்குத் துணை நிற்பாள். அஸ்வினி, பரணி, மூலம் மற்றும் ரேவதி நட்சத்திரக்காரர்கள் வாராஹியை வழிபடுவது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !