ஆதியோகி சிவன் யோகத்தின் மூலம் -2: சிவனே முதல் யோகி
ADDED :3158 days ago
யோகப் பாதையில் சிவனே முதல் யோகிஇ ஆதியோகி. ஏனென்றால்இ அவர் எல்லையில்லா தன்மையை உணர்ந்திருந்தார். சிவன் என்றால்இ ஒன்றும் இல்லாத வெறுமை என்று பொருள். எனவே எல்லையில்லாததையும்இ ஆதியோகியையும்இ நாம் சிவா என்று அழைக்கிறோம். ஆதியோகி ஒரு மனிதனுக்குள் நிகழக் கூடிய உச்சபட்ச பரிமாணத்தை அடைந்தவுடன் பல பேர் அவரை நோக்கி ஈர்க்கப்பட்டனர். இதில்இ மிக முக்கியமானவர்கள் சப்தரிஷிகள். இந்த ஞானத்தை ஆதியோகியே இவர்களுக்கு நேரிடையாக வழங்கினார். எனவேஇ யோகத்தில் அவரை நாம் ஆதியோகி எனக் கொண்டாடுகிறோம். நாம் உருவாக்கும் ஆதியோகியின் பிரம்மாண்ட திருமுகம் அவருக்கு ஒரு மணிமகுடம்.