உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவில் மாசித்திருவிழா துவக்கம்

காளியம்மன் கோவில் மாசித்திருவிழா துவக்கம்

குமாரபாளையம்: குமாரபாளையம், காளியம்மன் கோவில் மாசித்திருவிழா, பூச்சாட்டுதல் விழாவுடன் நேற்று துவங்கியது. குமாரபாளையத்தில் ஆண்டுதோறும் நடக்கும் காளியம்மன் கோவில் மாசித்திருவிழா மிகவும் பிரசித்தமானது. இந்தாண்டு விழா, நேற்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. வரும், 21ல், மறு பூச்சாட்டு விழா, கிராம சாந்தி பூஜை; 22ல், கோவில் வளாகத்தில் கொடியேற்று விழா நடக்கவுள்ளது. வரும், 28ல், தேர்கலசம் வைத்தல் வைபவம்; 1ல், மகா குண்டம் பூ மிதித்தல்; 2ல், அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலை, 10:00 மணிக்கு தேர் திருவிழா வைபவமும் நடக்கவுள்ளன. தொடர்ந்து, வரும், 5 வரை நாள்தோறும் சிறப்பு பூஜை, தீபாரதனை நடக்கிறது. ஏற்பாடுகளை திருவிழா ஆலோசனை குழு தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !