மழை வேண்டி முனியப்பனுக்கு ஊரணி பொங்கல்
ADDED :3157 days ago
பெ.நா.பாளையம்: பேளூர், கரடிப்பட்டி முனியப்பனுக்கு மழை வேண்டி, ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பெத்தநாயக்கன்பாளையம் அருகே கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி, முனியப்பன் கோவிலில் தொடர்ந்து நிலவி வரும் வறட்சி அகன்றிடவும், மழை பெய்ய வேண்டியும் பொங்கல் விழா வெகுவிமர்சையாக நடந்தது. காலை, 10:00 மணியளவில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட முனியப்பனுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு மேல் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஊரணி பொங்கல் வைத்தனர். இரவு, 7:30 மணியளவில் முனியப்பனுக்கு அரிசி மாவு மற்றும் கோழிகள் பலியிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.