புனித வனத்துசின்னப்பர் தேர் திருவிழா
ADDED :3156 days ago
வால்பாறை : ரொட்டிக்கடை புனித வனத்துசின்னப்பர் ஆலயத்தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை அடுத்துள்ளது ரொட்டிக்கடை பகுதியில் அமைந்துள்ளது புனிதவனத்துசின்னப்பர் ஆலயம். இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவை மறைமாவட்ட பொருளாளர் குருஜான்சேவியர்குழந்தை தலைமையில் கூட்டுப்பாடற்பலி, திருப்பலி நடந்தது. தொடர்ந்து இரவு ரொட்டிக்கடை, அப்பர்பாரளை, லோயர்பாரளை, ரோப்வே ஆகிய பகுதிகளிலிருந்து தேர்பவனி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.