உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர், காமாட்சி அம்மன் கும்பாபிஷேக விழா இன்று துவக்கம்

செல்வ விநாயகர், காமாட்சி அம்மன் கும்பாபிஷேக விழா இன்று துவக்கம்

திருப்பூர்: திருப்பூர், வீரபாண்டி கருப்பகவுண்டம்பாளையம், ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவில் திருப்பணி நிறைவுபெற்று மகா கும்பாபிஷேக விழா, இன்று துவங்குகிறது. இன்று துவங்கி, வரும், 17ம் தேதி காலை வரை, நான்கு காலயாக பூஜை, தீபாராதனை, கோபுரகலசம் வைத்தல், பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், விக்னேஷ்வர பூஜை, திருமுறை பாராயணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 17ம் தேதி காலை, 5:00 மணிக்கு மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை; 6:30 மணிக்கு மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடு நடக்கிறது. காலை, 7:35 மணிக்கு விநாயகர், காமாட்சி அம்மன், மீனாட்சி அம்மன் கோபுரம் மகா கும்பாபிஷேகம் விழா கோலகலமாக நடக்கிறது. பின், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார், ஊர்ப் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !