திறப்பு விழா காணுமா திருமேனிகள் பாதுகாப்பு மையம்?
திருப்பூர் : கோவில்களில் உள்ள உற்சவர் சிலைகளை பாதுகாப்பதற்காக, சிவன்மலையில் கட்டப்பட்டுள்ள திருமேனிகள் பாதுகாப்பு மையம், இன்னமும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான புராதன கோவில்களில், மதிப்பு மிகுந்த உலோக சிலைகள் உள்ளன. போதிய பாதுகாப்பின்றி, சிலைகள் திருடப்படுகிறது; வெளிநாடுகளுக்கும் கடத்தப்பட்டு வந்தது. கோவிகளில் உள்ள ஐம்பொன், செம்பு உள்ளிட்ட உலோக சிலைகளை பாதுகாக்கும் வகையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்டத்துக்கு ஒரு திருமேனிகள் பாதுகாப்பு மையம் அமைக்க, அரசு உத்தரவிட்டது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்துக்கென, ஒரு கோடி ரூபாய் செலவில், சிவன்மலையில் திருமேனிகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டது.
இங்கு, வெளிப்புறச்சுவர் மற்றும் கான்கிரீட் சுவர் என இரண்டு சுவர்கள், சிலைகள் வைக்கும் வகையில், தேக்கு மரத்தால் ஆன, கண்ாடி கூண்டுடன் கூடிய, 15 "ரேக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மையம் முழுவதும் "சிசி டிவி கேமரா, பயோ மெட்ரிக் அமைப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளுடன் இம்மையம் அமைந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், அறநிலைத்துறை கட்டுப்பாட்டில், 177 பட்டியல் இன கோவில்களில், 1077 பட்டியல் இனத்தில் சேராத கோவில்கள் உள்ளன. பழமையான, மதிப்புமிகு சிலைகள், 900 வரை உள்ளன. இம்மையம் திறக்கப்பட்டால், அனைத்து உற்சவர் சிலைகளும், இங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்.இம்மையம் திறக்கப்படாததால், பேரூர் மையத்திம்; பெரிய கோவில்களிம் வைக்கப்பட் டுள்ளன. திருவிழா காலங்களில், அங்கிருந்து எடுத்து வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, திருமேனிகள் பாதுகாப்பு மையத்தை உடனடியாக திறக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில்,"பணிகள் முழுமையடைந்துள்ளது. இங்கு வைக்க வேண்டிய கோவில்களின் சிலைகள் குறித்து ஒதுக்கீடு செய்து, திறக்க அனுமதித்தால், மையம் செயல்பாட்டுக்கு வரும். பிரதான ரோட்டில் உள்ளதால், சுற்றுச்சுவர் அமைக்க, 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரித்து, அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றனர்.