உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமானுஜர் 1,000வது ஜெயந்தி ரத யாத்திரைக்கு வரவேற்பு

ராமானுஜர் 1,000வது ஜெயந்தி ரத யாத்திரைக்கு வரவேற்பு

ஆத்தூர்: ஆத்தூரில், ராமானுஜர் ரதயாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமானுஜர், 1,000வது ஜெயந்தி விழாவையொட்டி கொண்டுவரப்பட்ட ரதயாத்திரைக்கு, நேற்று, ஆத்தூர் உழவர் சந்தை, வெள்ளை விநாயகர், ராணிப்பேட்டை விநாயகர், முல்லைவாடி கிருஷ்ணர் கோவில் ஆகிய இடங்களில், ஏராளமான மக்கள், வரவேற்பு அளித்தனர். ஆத்தூர் நகர் முழுவதும், ரத யாத்திரை ஊர்வலம் வந்தபோது, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில், மக்கள் ஆரத்தி எடுத்தனர். ராணிப்பேட்டை விநாயகர் கோவில் முன், வேறு இடத்துக்கு, கோவிலை அகற்றக்கூடாது என, பிரார்த்தனை வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை, ராமானுஜர் ஜெயந்தி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !