உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்தூர் விநாயகர் கோவில் வாடகை வசூலில் முறைகேடு?

ஆத்தூர் விநாயகர் கோவில் வாடகை வசூலில் முறைகேடு?

ஆத்தூர்: ஆத்தூர் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான கடை வாடகை வசூலில் முறைகேடு குறித்து, ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தினார். ஆத்தூர், புது பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள வெள்ளை விநாயகர் கோவிலுக்கு சொந்தமான, 70 ஆயிரம் சதுர அடி நிலத்தில், 40 கடைகள் உள்ளன. அவை, இந்து அறநிலைய துறையால், வாடகைக்கு விடப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் வரை, 12 லட்சம் ரூபாய், வாடகை நிலுவை உள்ளது. இந்நிலையில், கோவிலுக்கு சொந்தமான காலி இடங்கள், வாடகை வசூல் செய்வதில் பல்வேறு முறைகேடுகள், இறந்தவர்கள் பெயரில் கடைகள் உள்ளதாக புகார் எழுந்தது. ஆர்.டி.ஓ., செல்வன் உத்தரவுப்படி, கடை வாடகைதாரர்கள் விபரங்களை, வருவாய் துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள் சேகரித்தனர். அதில், முரண்பாடான தகவல் இருந்தது. குறிப்பாக, வாடகைக்கு விடப்பட்டது, வாடகை வசூல் செய்வதில் முறைகேடு உள்ளதாக தெரியவந்துள்ளது. அதன் விசாரணை அறிக்கை அடிப்படையில், இந்து அறநிலையத்துறை அலவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சேலம் கலெக்டருக்கு, ஆர்.டி.ஓ., செல்வன் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !